Sunday 4 November 2012

சித்த மருத்துவ பிரிவில் நிலவேம்பு கசாயம்:மருத்துவ அலுவலர் தகவல்

உடுமலை : உடுமலை அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவில், நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது, என சித்த மருத்துவ அலுவலர் லட்சுமிபதி ராஜ் கூறினார்.உடுமலை அரசு மருத்துவமனையில், சித்த மருத்துவப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இப்பிரிவில்,சித்த வைத்திய முறையில், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்பிரிவில், காலை வேளைகளில், நிலவேம்பு கசாயம்அனைத்து நோயாளிகளுக்கும் வழங்கப்படுகிறது.ஏன்ட்ரோ கிராபிகஸ் பேனிகுலேட்டா என்ற தாவரவியல்பெயர் கொண்ட இந்த நிலவேம்பு கசாயம் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கும் மற்றும் ஏன்டி வைரஸ் தன்மை உடையதாகும்.இந்த நிலவேம்பு கசாயத்தில், நிலவேம்பு மட்டுமின்றி,சுக்கு மிளகு பேய்புடல், பற்பாடகம் முதலான ஒன்பது வகை மூலிகை பொருட்கள் சேருகிறது. இதனை தினசரி காலை வேளைகளில் குடித்து வர எல்லாவிதமான காய்ச்சல் நீரழிவு தோல் நோய்கள் ஆகியவை குணமாகும்.நோய் எதிர்ப்புத்தன்மையை இக்குடிநீர் அதிகரிப்பதால், டெங்கு காய்ச்சல் போன்ற காய்ச்சல் வந்தாலும் நோயின் பாதிப்பு அதிகளவில் இல்லாமல் இருக்க வாய்ப்புள்ளது. எனவே, அனைவரும் நிலவேம்பு கசாயம் குடித்து பயன்பெறலாம்.இத்தகவலைஉடுமலை அரசு மருத்துவமனை சித்த மருத்துவ அலுவலர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment