Sunday 4 November 2012

டெங்கு காய்ச்சல் தடுக்க அரசு மருத்துவமனைகளில் நிலவேம்பு மூலிகை குடிநீர் : 7 நாள் குடிக்க வேண்டும்

ஈரோடு: டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நிலவேம்பு மூலிகை குடிநீர் வழங்கும் பணி துவங்கியுள்ளது. டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலை தடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பகுதி நேர ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிலவேம்பு மூலிகை குடிநீர் வழங்கப்படுகிறது. நிலவேம்பு, சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் சிறந்த மூலிகை. 

அரசு மருத்துவமனை சித்த மருத்துவர்கள் கூறுகையில், ‘மூலிகை குடிநீரை டெங்கு வந்தவர்கள் மட்டும் இன்றி, வராமல் தடுப்பதற்கும் பயன்படுத்தலாம். தொடர்ந்து 7 நாட்களுக்கு மூலிகை குடிநீரை குடித்தால், டெங்கு மட்டுமின்றி, பன்றிகாய்ச்சல், சிக்குன்குனியா, மலேரியா போன்ற நோய்களும் வருவதை முற்றிலும் தடுக்கலாம். காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. ஒவ்வொரு சீதோஷ்ண நிலை மாறும் சீசனிலும் நிலவேம்பு குடிநீரை குடிப்பதன் மூலம் வைரஸ் காய்ச்சல் வராமல்  தடுக்க முடியும்‘ என்றனர்.

No comments:

Post a Comment