Sunday 4 November 2012

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நிலவேம்பு கசாயம் வினியோகம்


திருச்செங்கோடு: திருச்செஙகோடு அரசு மருத்துவமனையில் உள்ள சித்தா மருத்துவ பிரிவில், வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த, நிலவேம்பு கசாயம் வழங்கபடுகிறது.
தமிழகத்தில், டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் தொற்று கிருமிகள் காரணமாக காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சல் பரவல் காரணமாக பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு வேகமாக பரவிய சிக்கன் குன்யா காய்ச்சலுக்கு சித்த மருத்துவத்துறை மூலம் வழங்கப்பட்ட நிலவேம்பு கசாயம் சிறந்த பலன் அளித்தது.


அதேபோல், டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், அதில் இருந்து விடுபட, முன் எச்சரிக்கையாக காய்ச்சல் வராமல் பாதுகாக்கவும், நிலவேம்பு கசாயம் பயன்படுத்தலாம் என சித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். காய்ச்சல் வராமல் தடுக்கவும், பாதிப்பில் இருந்து, பொதுமக்களை காப்பாற்றவும், அரசு மருத்துவமனைகளில், நிலவேம்பு குடிநீர் (கசாயம்) வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில், தினமும், நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது. இந்த கசாயத்தை, தினமும், 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி குடிப்பதுடன், தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் வாங்கிச் செல்கின்றனர். இந்த கசாயம், அனைத்து வகையான வைரஸ் காய்ச்சலையும் கட்டுப்படுத்தும், என, திருச்செங்கோடு அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் டாக்டர் சிதம்பரலட்சுமி தெரிவித்தார்.

No comments:

Post a Comment