Sunday 4 November 2012

டெங்கு காய்ச்சல் சித்த மருத்துவம் புறக்கணிப்பு

டெங்கு காய்ச்சலை குணப்படுத்த, சித்த மருத்துவத்தில் மருந்துகள் இருந்தும், இதற்கு, அரசு ஊக்கம் அளிக்கவில்லை என்ற புகார்எழுந்துள்ளது. டெங்கு, சிக்குன் - குனியா உள்ளிட்ட, வைரஸ் காய்ச்சல்கள் வராமல் தடுக்கும், நிலவேம்புக் குடிநீர், சென்னை, அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் உள்ள, 1,375 சித்த மருத்துவப் பிரிவுகளில், இம்மாதம் 26ம் தேதியில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது.

நிலவேம்புக் குடிநீர்: நிலவேம்புக் குடிநீர், அரசு சித்த மருத்துவமனைகளில் வழக்கமாக வழங்கப்படுவது தான். 
ஆனால், டெங்கு அறிகுறியுடன் அரசு பொது மருத்துவமனைகளுக்குவருவோருக்கு, சித்த மருத்துவ முறைப்படி, தயாரிக்கப்படும் மூலிகைமருந்துகளை வழங்க, அரசு உரிய ஊக்கம் அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு, சித்த மருத்துவ மாணவர்களிடம்எழுந்துள்ளது.
இதுகுறித்து, சித்த மருத்துவ மாணவர் வீரபாபு கூறியதாவது:டெங்கு காய்ச்சலுக்கு, அலோபதி மருத்துவத்தில் சொல்லப்படும் அறிகுறிகள் அனைத்தும், பித்த காய்ச்சல் என்ற பெயரில், சித்த மருத்துவ குறிப்புகளில் உள்ளது. 
டெங்கு காய்ச்சலின் காரணமாக, ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை குறையும்போது, நோயாளி இறக்க 
நேரிடுகிறது. நிலவேம்புக் குடிநீருடன், ஆடாதொடை இலையை சேர்த்து தயாரிக்கப்படும் கசாயம், ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறது.சீந்தில் கசாயம், பித்தத்தை தணிக்கும் தன்மை கொண்டது. 

காய்ச்சல் குணமாகிறது : டெங்கு அறிகுறியுடன், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு, இந்த இரண்டு கசாயங்களையும், இரண்டு மணி நேர இடைவெளியில், மாறிமாறி வழங்குவதன் மூலம், நான்கு நாட்களில், டெங்கு காய்ச்சல் குணமாகும். டெங்குவை குணப்படுத்த, அலோபதி மருத்துவத்தில் இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், இதுஉதவிடும்.உரியவழிமுறைகளின்படி தயாரிக்கப்படும், இந்த மருந்துகளை, டெங்கு நோயாளிகளுக்கு வழங்க, அரசு தயங்குவது ஏனென்று தெரியவில்லை.
இவ்வாறு, வீரபாபு கூறினார். 

பக்கவிளைவுகள் இல்லை : இந்திய மருத்துவ துறை அதிகாரி ஒருவர்கூறியதாவது: அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் நிலவேம்புக் குடிநீரை, தினமும் ஆயிரக்கணக்கோர், ஆர்வமுடன் பருகி வருகின்றனர். 
ஆராய்ச்சிபூர்வமாக நிரூபிக்கப்படாததால், டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு, சித்த மருந்துகளை ஊக்குவிக்க 
முடியாது.இம்மருந்துகளால் பக்கவிளைவுகள் இல்லாததால், அரசு மருத்துவமனைகளில், டெங்குவிற்கு சிகிச்சை பெறுவோர் விரும்பினால், அவர்களுக்கு, சித்த மருந்துகளும், சேர்த்து தரப்படும்.
இவ்வாறு, அவர்கூறினார்.

நிலவேம்புக் குடிநீரில் உள்ள மூலிகைகள்: நிலவேம்பு, பற்படாகம், விளாமிச்சை வேர், வெட்டி வேர், சந்தனம், பேய்புடல், சுக்கு, மிளகு, கோரைகிழங்கு. 

சீந்தில் குடிநீரில்உள்ள மூலிகைகள்: சீந்தில், பற்படாகம், சிட்ராமுட்டி, சந்தனம், சுக்கு, கோரைகிழங்கு, விளாமிச்சை வேர், வெட்டி வேர்.

No comments:

Post a Comment