Thursday, 22 November 2012

கோஸ் மேக்-அப்



குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாடாய் படுத்துவது மேக்-அப். குழந்தை கிளம்புமுன் ஒரு படி பவுடரை மூஞ்சியில் அப்பி, அம்மா அனுப்பும் போது தொடங்கும் மேக்-அப் ஆயுள் வரை தொடர்கிறது. தவிர்க்க முடியலேன்னா லேசா போடலாம். அழகாய் இருப்பது கலரில், மேக்-அப்பில், டிரெஸ்ஸில் எல்லாம் இல்லவே இல்லை. நம்மோட மனசில்தான் இருக்கிறது. நான் அழகு, நான் பேரழகு என்றெல்லாம் எண்ண வேண்டாம். ஆண்டவன் என்னை நல்லாவே செய்து அனுப்பி இருக்கிறார் என்ற எண்ணம் மட்டும் போதும்.
நிறைய நிறைய எங்கும் எப்போதும் தண்ணீரை குடித்துக் கொண்டு இருங்கள்.
எப்பெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் முகத்தை, கண்களை வெறும் பச்சை தண்ணீரால் கழுவுங்கள்.
தோய்த்த துணிகளை அணியுங்கள்.
வானிலைக்கு ஏற்ப 1-3 முறை குளியுங்கள்
இயற்கையாய் வீட்டில் பாட்டி தயாரிக்கும் சீயக்காய் பொடியை உடல், தலைக்கு பயன்படுத்தலாம்.
சோப்பு கூட தவிர்த்துவிடலாம். பெண்கள் தினமும் முகத்திற்கு மஞ்சள் பூசியும், வாரம் ஒருமுறை உடல் முழுதும் மஞ்சள் பூசியும் குளிக்கலாம். சரும நோய்கள் வரவே வராது.
அப்புறம், நாளை என்று எதையும் தள்ளக்கூடாது. நமது கடமையை அன்றே அப்போதே செய்திட வேண்டும்.
மனது ஒரு அற்புத இடம். அதில் நீங்கள் பட்ட துன்பம் பிறரை பற்றிய விஷயங்கள் என எந்த குப்பையும் உள்ளே இருக்கக்கூடாது.
பயனுள்ள விஷயம், பயனில்லாத விஷயம் என பிரித்து தேவையில்லாததை போகி பண்ணி விட வேண்டும்.
எப்போதும் சிரித்த முகமும், மகிழ்ச்சி மனமாய் இருக்க வேண்டும்.

இதெல்லாம் கடைபிடிச்சா எப்போதும் அழகாய் இருப்பீர்கள்; ஆரோக்கியமாய் இருப்பீர்கள்; வெற்றியாய் இருப்பீர்கள்!
அதிகாலை சீக்கிரம் எழணும், இரவு 10க்குள் படுத்துவிட வேண்டும். சரி, சரி இதோ ஒரு டிப்… முட்டைக்கோஸை வேக வைத்த நீரை வடிகட்டி முகம் கழுவிப் பாருங்கள். ஒரு இஞ்ச் மேக்-அப் போட்டதுபோல முகம் பிரகாசிக்கும்.

நன்றி தினமலர்!

No comments:

Post a Comment