பருவுக்கு வீட்டிலேயே ஒரு முதலுதவி. வசம்பு, கொத்தமல்லிவிதை, பாச்சோடி (இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்) இவை மூன்றிலும் தலா 25 கிராம் எடுத்து கொண்டு, கழுவி சுத்தம் செய்யுங்கள். மூன்றையும் தண்ணீர் விட்டு அரைத்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். ஒரு மணி நேரம் காய வைத்து பிறகு குளிர்ச்சியான தண்ணீரில் கழுவி விடுங்கள். தொடர்ந்து இப்படி செய்துவந்தால் முகப்பரு காணாமல் போகும். முகப்பருவை தொடாதீங்க, கிள்ளாதீங்க முக்கியமான விஷயம் இது.
பன்னீர் பேஸ் வாஷ்!
15 மிலி தரமான பன்னீரை எடுத்து கொண்டு, முகத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த தண்ணீரில் கழுவி விடுங்கள். தொடர்ந்து சில நாட்கள் இப்படி செய்து வந்தாலும் பரு போய்விடும்.
மல்டிபொடி பேஸ்பேக்!
வேப்பிலை பொடி, புதினா பொடி, துளசிப் பொடி இவைகளை தலா ஒரு டீஸ்பூன் எடுத்து கொண்டு, முல்தான்மட்டி கால் டீஸ்பூன் சேர்த்து, மிதமான சுடுத் தண்ணீர் சேர்த்து மேற்கொண்ட பொடிகளை சந்தனம் போல் குழைத்து முகத்தில் தடவவும். கண்களுக்கு அடியில் கண்டிப்பாக தடவக்கூடாது. 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிவிடவும். தொடர்ந்து சில நாட்கள் இப்படி செய்துவந்தால் பரு பறந்துவிடும்.
பருவிற்கு மருந்துப்பொடி!
அருகம்புல் பொடி, குப்பைமேனி இலைப்பொடி இரண்டையும் சம அளவு கலந்து, பருவின் மேல் மருந்து போல போட்டு இரவில் தூங்கி, காலையில் அலம்புங்கள். தொடர்ந்து செய்தால் பரு மறையும்.
பரு வராமல் இருக்க…
பத்து பன்னீர் ரோஜா மொட்டுக்களை எடுத்து அது நனையும் அளவு சூடான தண்ணீர்விட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அந்த நீரை வடிகட்டி முகத்தில் தடவி அரை மணி நேரம் ஊறவிட்டு, பின்னர் முகம் கழுவவும். இப்படி தொடர்ந்து செய்துவர பரு போகும்.
மேற்சொன்னவைகள் சாதாரணமாக சின்ன சின்ன காரணங்களால் தோன்றும் முகப்பருவிற்கான ட்ரீட்மென்ட்தான். பக்க விளைவுகள் இல்லாதது. இதிலும் சரியாக வில்லையென்றால் மருத்துவரை நாடுவதுதான் சிறந்தது.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment