Thursday, 22 November 2012
கூந்தல் வளர..
* அரைமுடி தேங்காயுடன், இரண்டு சிறிய வெங்காயம் சேர்த்து அரைத்து, சாற்றை மட்டும் எடுத்து தலையில் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊற விடுங்கள். பின், வழக்கமான ஷாம்பூ அல்லது சீயக்காய் தேய்த்து தலைக்கு குளியுங்கள். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை இவ்வாறு குளிக்கலாம். வெறும் தேங்காய்ப் பாலை தலைக்கு தேய்த்து ஊற வைத்தும் குளிக்கலாம்.
* கற்றாழையின் நடுவில், கத்தியால் நீளமாக ஒரு கீறல் போடுங்கள். உள்ளே உள்ள கொழ கொழப்பான சோற்று பகுதியில், கையளவு வெந்தயத்தைப் போட்டு, கற்றாழையை பழையபடி மூடி, நூலால் கட்டி விடவும். உள்ளே இருக்கும் சோற்றில் ஊறும் வெந்தயம், இரண்டு நாட்களில் முளை கட்டியிருக்கும். அதனுடன் கற்றாழையின் சோற்றையும் எடுத்து, நன்றாக அரைத்து வடையாக தட்டி வெயிலில் உலர்த்தி, தேங்காய் எண்ணெயில் போட்டு, ஊறவிட்டு தலைக்கு தினமும் பூசி வர, முடி நன்றாக வளரும். மேலும் தலைக்கு ஆயில் மசாஜ் செய்யவும் பயன்படுத்தலாம்.
* புதினா இலைகளை சுத்தமான தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அதில் கிடைக்கும் டிகாஷனை தலைக்கு பூசி, ஊறவைத்தும் குளிக்கலாம். இதேபோல, செம்பருத்தி இலைகளை கொதி நீரில் போட்டு, டிகாஷனை எடுத்தும் குளிக்கலாம். செம்பருத்தி பூவை, தேங்காய் எண்ணெயில் ஊற போட்டு தொடர்ந்து பயன்படுத்தி வரலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment