Tuesday, 20 November 2012

கிரகணம் - பாம்பு சந்திரனை மூழிங்கிடுச்சு

இந்திய பண்பாட்டில் இருந்து

பாம்பு சந்திரனை மூழிங்கிடுச்சு


இராகு , கேதுவை பற்றி ஆராந்தபின்புதான் நான் ஜோதிடத்தையே நம்ப ஆரம்பித்தேன்.
சூரியன் தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் போது , கனத்த அனுக்களெல்லாம் மையம் நோக்கி செல்லும்.இந்த அழுத்தம் காரணமாக அணுசிதைவு ஏற்பட்டு அவை மேலும் நெருக்கமுற்று சக்திவாய்ந்த காந்தக்களமாக மாறிக் கொண்டிருக்கிறது.

இதன் ஈர்ப்பு சக்தி பயங்கரமானது, ஒளியை கூட இழுத்துவிடும். ஒரு பொருளின் மீது ஒளி பட்டு திரும்பி வந்தால் தானே அது நம் கண்ணுக்கு தெரியும். அதனால் தான் இந்த கரும்புள்ளி (பிளாக் ஹோல்) கண்ணுக்குத் தெரியாது என்று விஞ்ஞானி ஸ்டிபன் ஹாகிங் கூறுகிறார்.
மேலும் அழுத்தம் அதிகரிக்கும் போது , இந்த கரும்புள்ளி சூரியனில் இருந்து இரண்டு காந்த அலை பாதைகளாக வெளியேரும் அது தான் ஒருபுறம் ராகு என்றும் மறுபுறம் கேது என்று சொல்கிறார்கள்.


எந்த ஜாதகத்திலும் போய் பாருங்கள் ராகு,கேது நேர் எதிராக தான் இருக்கும்.




இந்த ராகு , கேது காந்த அலைபாதைகளில் பூமியும், சந்திரனும் ஒரு நேரத்தில் வரும்போது கிரகணம் ஏற்படும்.அந்த காலத்தில் பாம்பு சந்திரனை மூழிங்கிடுச்சுனு சொன்னாங்க அது வேற ஒன்னும் இல்ல இந்த காந்த அலை பாதையை தான் சொன்னாங்க. அலைபாதைத்தான் பாம்பு என்று சொன்னார்கள். பாம்பு போலத்தானே இருக்கும்.

ஒவ்வொரு மாதமும் சூரியன்,பூமி , சந்திரன் நேர் கோட்டில் வரும் அப்போதெல்லாம் கிரகணம் வராது.சூரியனிடம் இருந்து வரும் காந்த அலை பாதையும் அதே நேர்கோட்டில் இருந்தால் தான் கிரகணம்.

உண்மையை சொல்லியிருந்தால் அந்த காலத்தில் யாரும் நம்பி இருக்க மாட்டார்கள்.இப்படி சொன்னதால் தான் பல தலை முறை தாண்டியும் அறிவியல் வந்து சேர்ந்திருக்கு. ஒவ்வொரு தலைமுறையிலும் சில மனிதர்கள் இந்த உண்மையை உணர்ந்திருப்பர்....

No comments:

Post a Comment