இந்திய பண்பாட்டில் இருந்து
சித்திரை 1 தமிழ் புத்தாண்டா ?
நல்ல வேலை தமிழ் புத்தாண்டை தை 1னு மாற்றி ஒரு புரளிய கிளப்புனாங்க , இல்லாவிட்டால் நமது தமிழ் புத்தாண்டை பற்றிய வானியல் உண்மை பலருக்கு தெரியாமலே போயிருக்கும்.
ஏனோ தானோனு நாம புத்தாண்ட நாமகொண்டாடல. இதுக்கு ஒரு வரலாறே இருக்கு.
ஆதி தமிழன் சூரியன், சந்திரன் நகர்வை புரிந்து கொண்டான். இவை ஒரு விதியின் கீழ் செயல்படுவதை உணர்ந்தான். விவசாயம் செய்ய தொடங்கியவனுக்கு பருவ நிலை மாற்றத்தைப் புரிந்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது , இதன் விளைவாக தான் ஆண்டு கணக்கீடு முறை உருவானது ( கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்). சந்திரனை அடிப்படையாகக் கொண்டு மாதங்களை உருவாக்க்கினான். சூரியனின் கிழக்கு மேற்கு நகர்வை நாட்கள் என்றான். சூரியனின் வடக்கு தெற்க்கு நகர்வை அயனநகர்வு என்றான். ( படத்தில் காணவும் )

அயன நகர்வின் போது சூரியன் வான் உச்சிக்கு வரும் நாளே ஆண்டின் தொடக்கமாகக் கொள்வது தமிழரின் மரபு.அப்போது இருந்தக் குமரி நிலப்பரப்பில் சூரியன் நிலநடுக் கோட்டில் வான் உச்சிக்கு வரும் நாளே ஆண்டின் தொடக்கம். அன்று இரவும் பகலும் சம நீளம் கொண்டதாக இருக்கும். அது இன்றைய பங்குனி 8 ( மார்ச்சு 21).
(திருவள்ளுவருக்கு முன்பு) தி.மு 10,000 முன் இருந்த குமரி நிலப்பரப்பை படத்தில் காணலாம்.....
கடற்கோளுக்குப் பின் கபாடபுரத்திற்கு நகர்ந்த மக்கள் ஆண்டின் தொடக்கத்தை அந்நிலத்தில் சூரியன் வான் உச்சிக்கு வரும் நாளான இன்றைய சித்திரை 1 ( ஏப்ரல் 14 ) க்கு மாற்றினர்.கபாடபுரம் கடற்கோளில் அழிந்த பின் தமிழர்கள் இன்றைய தமிழ் மண்ணுக்கு வந்து சேர்ந்தனர்.
அப்பொழுதுதான் ஆண்டின் தொடக்கம் குழ்ப்பதிற்கு உள்ளானது. இன்றைய தமிழ் நிலத்தில் சூரியன் வான் உச்சிக்கு வரும் நாள் சித்திரை 10 ஆகும்.
இதற்கு 2 சான்றுகள் உள்ளன
1. அந்த நாள் இன்று பொன்னெர் பூட்டல் (கிராமத்து மக்களுக்குநன்றாக தெரியும் )
2. கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள லிங்கத்தின் மீது சித்திரை 10 அன்று சூரியன் ஒளி படும்.
அதனால், சூரியன் வான் உச்சிக்கு வரும் நாளே நமக்கு ஆண்டின் தொடக்க நாள்.
மார்ச்சு 21ஐ ஆண்டின் தொடக்கமாக கொண்ட குமரிகண்டத் தமிழர்களின் நாள்காட்டியே . 1952 முதல் நமது இந்திய அரசு தனது அலுவல் நாட்காட்டியாகப் பயன்படுத்தி வருகிறது !
நித்திரையில் இருந்தாலும் தமிழாசித்திரை
தானடா உனக்கு தமிழ் புத்தாண்டு !
No comments:
Post a Comment