Tuesday, 20 November 2012

வாரண முகத்தானுக்குத் தோப்புக்கரணம்

இந்திய பண்பாட்டில் இருந்து


வாரண முகத்தானுக்குத் தோப்புக்கரணம்


தோர்பிஹ்=கைகளால்
கர்ணம்=காது
விநாயகரை வணங்கும் பொழுது தோப்புக்கரணம்போடனும்னு எங்க பாட்டி சொல்லிகொடுத்தாங்கஎங்கபாட்டி 
சொன்னதையே தான் Dr. Paul Nogierரும் திரு.Choa Kok Suiம் சொல்றாங்கChoa Kok Sui தோப்புக்கரணம் பற்றி SUPER BRAIN YOGA என்று ஒரு நூலையே எழுதியுள்ளார் (விலை1250 ரூபாய்). அவர்கள் பயிற்சி வகுப்பிற்கு நாம் செலுத்த வேண்டிய கட்டணம் 5000 ரூபாய். அவர்கள்சொல்வது,
  • இந்த எளிய யோகா மூலம் மூளையின்செல்களும்நியூரான்களும் புத்துணர்ச்சி அடைகின்றன
  • தோப்புக்கரணம் போடும்போது காதுகளைப் பிடித்துக் கொள்வதால்முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. இதனால்பிட்யூட்டரி சுரக்கின்றது .
  • படிக்கும் குழந்தைகளுக்கு நினைவாற்றல் திறன்அதிகமாகின்றது.
  • மூளையில் நியூரான்களின் செயல்பாடுகள் அதிகரிக்கிறது
  • மூளைக்கு தகவல் அனுப்பும் காரணிகளும் வலுப்பெறுகின்றன.
  • மன இறுக்கம் சம்பந்தப்பட்ட நோய்களுக்குக்கூட தோப்புக்கரணத்தை டாக்டர்கள்பரிந்துரைக்கிறார்கள்.
அப்படியாஅப்ப பிள்ளையாருக்கு முன்னாடி எப்படிதோப்புக் கரணம் போடறதுங்கிறீங்களா
சொல்றேன்,
1. இரு கால்களுக்கும் நடுவே உங்கள் தோள்பட்டைநீளம் இடைவெளி விட்டு நில்லுங்க
2. இடது கையால் வலது காதுமடலை பிடிக்கவும்.கட்டைவிரல் வெளியேயும் ஆள்காட்டி விரல்உட்பக்கம் 
இருக்குமாறு இருவிரலால் பிடிக்கவும்
3. அதே போல் வலது கையால் இடது காதைபிடிக்கவும்வலது கை கண்டிப்பாக இடது கையின்மேல் இருக்க வேண்டும்.
4. தலை நேராய் பார்த்த படியே முச்சு காற்றை விட்டபடியே உட்காருங்கள்சிரமம் இல்லாமல்எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம்உட்காரவும்.
5. முச்சை இழுத்துக்கொண்டே எழவும்வேகமாய்செய்யக் கூடாது பொறுமையாக செய்யவும்.முதுகுதண்டு நேராக இருக்க வேண்டும்.
6. இதை 3 நிமடம் அல்லது 14 முதல் 21 முறைசெய்யவும்.
7. இதை கிழக்கு திசை நோக்கி செய்ய வேண்டும் என்றுபாட்டி சொல்லுவாங்க.( இதற்கு மட்டும் அறிவியல்அடிப்படை எனக்கு தெரியவில்லை)
8. நாக்கை மடித்து ,நுனி நாக்கு மேல் அண்ணத்தைதொட்டுக்கொண்டு ( 'ழ்' உச்சரிக்கும் நிலை) இருக்குமாறு தோப்புக்கரணம் செய்ய வேண்டும்.இப்படி செய்தால் பீனியல் சுரப்பி நன்றாக சுரக்கும்

டமிலன் என்னைக்கு தமிழனை நம்பியிருக்கான், எதாவது வெளிநாட்டு காரங்க சொன்னாதான் உடனே நம்புவான், அந்த டமிழனுக்காக,
வெளிநாட்டு காரங்க எப்படி தப்புதப்பா , முதுகைவளைச்சுகிட்டு , மெதுவா செய்யாம வேக வேகமாகசெய்றாங்கனு இங்க பாருங்க
,http://www.disclose.tv/action/viewvideo/60711/Superbrain_Yoga/

என்ன, இனிமேல் குளிச்சிட்டு வந்து சாமி கும்பிடும் போது இப்படி கரணம் போடுவோமா?




No comments:

Post a Comment