Thursday, 22 November 2012

மினி ரெசிபி! - வாழைக்காய் குணுக்கு!



தேவையானப் பொருட்கள்:
வேக வைத்து மசித்த வாழைக்காய் - 2 கப்

துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, அரிசி மாவு - தலா 2 தேக்கரண்டி.
காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி
தேங்காய் துருவல்- 2 தேக்கரண்டி
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை: மூன்று வகை பருப்புடன், காய்ந்த மிளகாய் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின், தண்ணீரை வடித்து மிக்சியில் போட்டு, கெட்டியாக அரைக்கவும். அதனுடன், மசித்த வாழைக்காய், அரிசி மாவு, தேங்காய் துருவல், பெருங்காயத்தூள், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுத்துப் பரிமாறவும். 
***

No comments:

Post a Comment